சென்னை: பெண்களுக்கான ‘ஸ்பீடு செஸ்’ 4வது கிராண்ட்பிரிக்ஸ் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்தியாவின் கொனேரு ஹம்பி தோல்வியைத் தழுவினார்.
இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் அலெக்சாண்டிரா கோஸ்டெனியுக்குடன் மோதினார் உலகின் 2ம் நிலை வீராங்கனையான கொனேரு ஹம்பி. இதில், எப்படியும் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹம்பி, 5-7 என்ற கணக்கில் போட்டியை இழந்தார்.
இத்தொடரில், மொத்தம் 10 புள்ளிகளைப் பெற்ற ஹம்பி, 7வது இடமே பிடித்தார்.
இத்தொடரில், முதல் இரண்டு இடங்களைக் கைப்பற்றிய ரஷ்யாவின் கோஸ்டெனியுக்(24 புள்ளி) மற்றும் உக்ரைனின் அனா உஷேனினா(22 புள்ளி) ஆகியோர் ‘சூப்பர் பைனல்’ சுற்றுக்கு முன்னேறினர்.