தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே ட்விட்டரில் தீவிர சண்டை நடந்து வருகிறது.

நெட்டிசன்களின் மோதல்கள், பிரபலங்களின் சர்ச்சை கருத்துகள், உலகளவில் ஹேஷ்டேக்குகளை பிரபலப்படுத்துவது என ட்விட்டர் பெரும் பங்கு வகிக்கிறது.

தற்போது ட்விட்டரில் தெலுங்கு ரசிகர்கள் TwoodDominatingsouth என்ற ஹேஷ்டேக்குடன் படங்களை ட்வீட் செய்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக, தமிழ் திரைப்பட ரசிகர்கள் KwoodDominateIndia என்ற ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்த ஹேஷ்டேக் இப்போது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதோடு சிறந்த நடிகர்களின் படங்களுடன் பல மீம்ஸ்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள் தமிழ் ரசிகர்கள்.