கொல்லம்

னிமையில் இருக்க வேண்டிய கொல்லம் துணை ஆட்சியர் தப்பிச் சென்றுள்ளார்.

கேரளாவின் கொல்லம் பகுதியில் துணை ஆட்சியராக பணியாற்றி வருபவர் அனுபம் மிஸ்ரா.

புது மாப்பிள்ளை. அண்மையில் மனைவியுடன் வெளிநாட்டுக்கு ஹனிமூன் போய் விட்டு கடந்த 19 ஆம் தேதி கொல்லம் திரும்பினார்.

அயல்நாடு சென்று வந்ததால்-கொரோனா பாதிப்பில் இருந்து மற்றவர்களை பாதுகாக்கும் வகையில்- தனிமைப் படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அவரை அறிவுறுத்தியது.

வீட்டிலேயே தனிமையில் இருந்தார்.

நேற்று சுகாதார அதிகாரிகள் மிஸ்ரா வீட்டுக்குச் சென்ற போது, அவர் ‘மிஸ்ஸிங்’.

செல்போனில் தொடர்பு கொண்டபோது’’ கொல்லத்தில் உறவினர்கள் யாரும் இல்லாததால் பெங்களூருக்கு வந்துள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் மிஸ்ரா உ.பி.மாநிலம் கான்பூரில் தங்கி இருப்பதாக ‘டவர்’ மூலம் கண்டறியப்பட்டது.

தனிமையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்ட நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரியே  விதிகளை மீறி, ஓட்டம் பிடித்திருப்பது ,அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

‘’இது சட்டத்தை மீறிய  செயல்’’ என்று கண்டித்துள்ள மாவட்ட ஆட்சியர் அப்துல் நசீர்’’ மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தப்படும்’’ என்று எச்சரித்துள்ளார்.

– ஏழுமலை வெங்கடேசன்