சென்னை:

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் 6 விக்கெட்களை இழந்து 202 ரன்கள் எடுத்தது. அடுத்து சென்னை அணி தொடர்ந்து விளையாடுகிறது. சென்னை அணிக்கு 203 ரன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.