டில்லி:

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏல நடைமுறைகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்தில் இருந்து இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனங்கள் வெளியேறிவிட்டன.

‘‘இதன் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்தை மலிவு விலையில் ஏலம் எடுக்க சில ஏலதாரர்கள் மூலம் அழுத்தம் ஏற்படுத்தப்படுகிறது. பொது சொத்தை தனியார் மயமாக்குபோது இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கமாக செயலாகிவிட்டது’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ்திவாரி தெரிவித்தள்ளார்.

‘‘ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் முடிவு வரவேற்க்கத்தக்கது. இது தைரியமான முடிவு. ஆனால் இதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லாததால் ஏலத்தில் இருந்து வெளியேறுகிறோம்’’ என்று ஜெட் ஏர்வேஸ் துணை சிஇஒ அமித் அகர்வால் தெரிவித்துள்ளார்.