சென்னை:

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

இந்நிலையில் போட்டியின் போது, மைதானத்தில் செருப்பு வீசபப்ட்டது. செருப்பு வீசியவர் உள்பட 6 பேரை போலீசார் மைதானத்திலிருந்து வெளியேற்றினர். மைதானத்தில் விழுந்த செருப்பை வீரர் ஜடேஜா அப்புறப்படுத்தினார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் போட்டி தொடர்ந்து நடக்கிறது.