சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நமது அம்மா நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் இன்று தனிப்படையின் விசாரணைக்கு ஆஜராகிறார்.

மறைந்த ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாக கொலை, கொள்ளை கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்றது. இதுதொடர்பான  200க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ள நிலையில், இன்று நமது அம்மா அதிமுக பத்திரிகை முன்னாள் ஆசிரியரும், தற்போது ஓபிஎஸ் ஆதரவாளருமாக இருக்கும்  மருது அழகுராஜை விசாரணைக்கு ஆஜராகும்படி தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, இன்று காலை கோவையில் விசாரணைக்கு ஆஜராகிறேன்’ என்று மருது அழகுராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கருத்து மோதல் வந்த நிலையில், நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பதவியிலிருந்து மருது அழகுராஜ் விலகியதுடன், நமது அம்மா நாளிதழ் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் என்று சொல்லப்பட்டாலும், அதன் உரிமையாளர் எஸ்.பி. வேலுமணியின் உறவினரும், பினாமியான சந்திரசேகர்தான். இது அதிமுவின் தலைமைக்கான பத்திரிகை அல்ல என்று தான் பணியாற்றி வந்த பத்திரிகை குறித்து  கூறியதுடன், எடப்பாடி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி ஓபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.