ஸ்டீல் காயல் திருட்டு வழக்கில் திருவள்ளூர் பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது!

Must read

சென்னை: ஸ்டீல் காயல் திருட்டு வழக்கில் திருவள்ளூர் பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக  மாநிலத்தில் இருந்து,  சென்னை மணலி பகுதியில் உள்ள இரும்பு ஆலை ஒன்றுக்கு  ரூ.35 லட்சம் மதிப்பிலான 29 டன் ஸ்டீல் காயல் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த லாரி லோடுடன்  திடீரென மாயமானது. இதுதொடர்பான  காவல்துறை விசாரணையில், அந்த லாரியை ஒரு கும்பல் கடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.  இந்த கடத்தல் கும்பலுக்கு லாரி ஓட்டுநர் செல்வமும்  உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதற்கிடையில்,  இரும்பு தகடுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யு வருவதாகவும் தகவல்கள் தெரிய வந்தது. இதையடுத்து இரும்பு தகடுகளை விற்பனை செய்த  கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லாரியுடன் இரும்பு காயலை கடத்தியது அவர்கள்தான் என்பதும்,   அந்த இரும்பு காயல் ரூ.12 லட்சத்திற்கு  விற்பனை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இந்த கடத்தல் கும்பலில்  திருவள்ளுரைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் பாரதிராஜாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்க்கது.

More articles

Latest article