சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விலைக்கு வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்து உள்ளார்.

புற்றுநோய் உள்பட பல்வேறு நோய் பரவலுக்காக காரணமாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பொதுமக்களின் போராட்டம் – துப்பாக்கி சூடு போன்ற காரணமாக கடந்த 2018ம் ஆண்டு மூடப்பட்டது. க ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 மே 22 இல் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13பேர் பலியாகினர் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. தமிழகஅரசும், ஆலையை திறக்க அனுமதி மறுத்து வருகிறது.

இதற்கிடையில், கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலக்கட்டத்தில், உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மையத்தில் ஆக்சிஜனை மட்டும் உற்பத்தி செய்வதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 27 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது.  அதன் பிறகு, ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்வதற்கு வேதாந்தா நிறுவனம் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

இதையடுத்து, ஆலையை விற்பனை செய்யப்போவதாக அதன் நிறுவனர் அனில்அகர்வால் கூறினார். ஆலையை வாங்க விருப்பமுள்ளோர் ஜூலை 4 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என  அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை விலைக்கு வாங்க 7 நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  காப்பர் ஒயர்களை இந்தியா தயாரிக்க உலகம் விரும்பவில்லை என்றவவர், அதனால்தான், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு பின்னணியில் சீனா இருந்தது என்றும், ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு சீனா நிதியுதவி அளித்ததாக அனில் அகர்வாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.