உதகை: கொடநாடு வழக்கின் விசாரணை அக்டோபர் 1-க்கு ஒத்தி வைத்தது உதகை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு, திமுக ஆட்சிக்கு வந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது, இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது, மீண்டும் குற்றவாளிகளிடம் விசாரணை வாக்குமூலம் என பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, வழக்கில் சாட்சிகளாக கருதப்படும் கொடநாடு எஸ்டேட் மேலாளர், தடயவியல் நிபுணர், மின்வாரிய அதிகாரி மூவரும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதையடுதது, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாட்சிகள் யாரும் ஆஜராகாத நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சயானும், வாளையாறு மனோஜும் ஆஜராகினர்.

விசாரணையின்போது,  கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில், மேல் விசாரணையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததை சுட்டிக்காட்டிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், புலன் விசாரணை நடத்த கால அவகாசம் வேண்டும் என கோரினார்.

இதனை ஏற்ற நீதிபதி, விசாரணையை அக்டோபர் மாதம் 1-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.