புதுச்சேரி

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கிரண்பேடி நன்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் வருடம் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண் பேடி பதவி ஏற்றார்.  அவர் பதவி ஏற்றதில் இருந்தே அவருக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் கடும் மோதல் இருந்து வந்தது.    ஆட்சி விவகாரங்களில் அவர் தலையீட்டால் பல நற்பணிகள் நிறுத்தப்பட்டதாக  குற்றச்சாச்ட்டுக்கள் எழுந்தன.  இதையொட்டி அவரை திரும்பப் பெறக் கோரி பல்வேறு கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர்.

கடந்த வாரம் டில்லி சென்ற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரண் பேடி மீது புகார் கொடுத்து அவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுதார்.  நேற்று குடியரசுத் தலைவர் வெளியிட்டுள உத்தரவில் கிரண் பேடியை நீக்கி உள்ளதாகவும் அவரது பொறுப்பை தெலுங்கானா அளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையொட்டி கிரண் பேடி வெளியிட்டுள்ள செய்தியில்,

“எனக்கு புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பணி புரிந்த காலம் எனது வாழ்நாளில் நல்ல ஒரு அனுபவமாக அமைந்ததற்கு இந்திய அரசுக்கு நன்றியை தெரிவிட்துக் கொள்கிறேன்.

மேலும் என்னுடன் பணி புரிந்த அனைவாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  எனது ஆளுநர் பதவிக்காலம் எனக்கு மக்கள் பணி புரிந்ததன் மூலம் முழு திருப்தியை அளித்துள்ளது.

நான் எனது பணிகளை சட்டத்துக்கு உட்பட்டும் மனச்சான்றுடனும் செய்துள்ளேன்.

புதுச்சேரிக்கு ஒளிமயமான ஒரு எதிர்காலம் உள்ளது.   அது தற்போது மக்களின் கைகளில் உள்ளது.  வளமான புதுச்சேரிக்கு எனது வாழ்த்துக்கள்”

என தெரிவித்துள்ளார்.