கத்ரீனா கைஃப், தீபிகா படுகோன், யானா குப்தா, சோனாலி ரவுத், உஜ்வாலா ரவுத், நர்கிஸ் ஃபக்ரி, புருனா அப்துல்லா, தீப்தி குஜ்ரால், லிசா ஹெய்டன் மற்றும் ஏஞ்சலா ஜான்சன் என்று பல்வேறு நடிகைகள் மற்றும் மாடல்களின் பயிற்சி பட்டறையாக திகழ்ந்த கிங்பிஷர் காலண்டர் 2021 ம் ஆண்டோடு நிறுத்தப்பட்டுள்ளது.

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் நிறுவனம் 2003 ம் ஆண்டு துவங்கிய இந்த காலண்டர் தொடர்ந்து 19 ஆண்டுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

19 ஆண்டுகளாக இந்த காலண்டரை மட்டுமன்றி இளைஞர்களின் மனதையும் ஆக்கிரமித்த மாடல்களின் புகைப்படங்களை எடுத்தவர் அதுல் கஸ்பிகர் என்ற புகைப்படக்கலைஞர் .

இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் வரவேற்பை பெற்ற இந்த காலண்டர் தென் ஆப்பிரிக்கா, கிரீஸ் என்று பல்வேறு நாடுகளில் படம்பிடிக்கப் பட்டது, கடைசியாக சென்ற ஆண்டு வெளியான இந்த காலண்டர் கேரளாவில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.