வறுமையும் மோசடியும் நிறைந்த குஜராத் கிராமத்தில் அவலம்: சிறுநீரக வியாபாரம் கனஜோர் !

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

kidneytheft1
குஜராத் மாநிலத்தில் உள்ள பண்டோலி கிராமத்தில் நடைபெற்ற ஒரு உடல் உறுப்பு மோசடிப் பற்றிய செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 27 வயது கால்நடை வர்த்தகர் அமீர் மாலிக் என்றவர் அவரது கடனை அடைப்பதற்காக அவரது சிறுநீரகத்தை விற்றதில் ஏமாற்றமடைந்ததாகக் கூறி எப்.ஐ.ஆர் தாக்கல் செய்திருக்கிறார். மாலிக்கிற்கு ரூ.1 லட்சம் கடன் இருந்ததாக அவரது தந்தை தகவலளித்தார். வட்டி இல்லாமல் கடன் கொடுக்குமாறு அவரது நண்பர்களிடம் உதவி கேட்டார். பிப்ரவரி 12 அன்று அவரது நண்பர்கள் அவருக்கு போதை மருந்து கொடுத்து, மாலிக்கின் கவனத்திற்கு உட்படுத்தபடாமல், அவரது அனுமதி இல்லாமலேயே, அவரை தில்லிக்கு அழைத்துச் சென்று அவரது சிறுநீரகத்தை விற்றனர். இதில் அவருக்குக் கிடைத்த ரூ 2.3 லட்சம் பணத்தை வைத்துக் கடனை அடைத்து மீதமுள்ளத் தொகையை அவரது இரண்டு மகள்களுக்காக வங்கியில் சேமித்து வைத்துள்ளார்.
பண்டோலியில் குறைந்தது 13 ஆண்கள் ஒரு சிறுநீரகம் இல்லாமல் உள்ளனர் என்று மாலிக் அவரது எஃப்.ஐ.ஆர். ல் கூறியுள்ளார். எப்.ஐ.ஆர் போட்டபிறகு இந்த விஷயத்தைப் ப்ற்றி ஆய்வு செய்ய ஆனந்த் போலீஸ் ஒரு சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைத்து பண்டோலி கிராம மக்களைக் கேள்வி கேட்டு வருகின்றனர்.
கடனை செலுத்துவதற்காகச் சிறுநீரகத்தை விற்பனை செய்யும் விஷயத்தைப் பற்றிக் கிராம மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளனர் என்பது மேலும் ஆச்சரியத்தை அளிக்கிறது. இது ஒரு “சாதாரண வழக்கம்தான்” என்றும் சிறுநீரக விற்பனையாளர்களைக் கண்டுபிடித்து அழைத்துச் செல்ல மருத்துவமனைகள் அவர்களது முகவர்களை அனுப்புவர் என்றும் பண்டோலி மக்கள் கூறுகின்றனர்.
யார் வேண்டுமானாலும் தானாக முன்வந்து தனது சொந்த விருப்பத்தில் சிறுநீரக தானம் செய்ய முடியும் என்றாலும், பண்டோலி கிராம மக்கள் செய்து வருவது “உடல் உறுப்புச் சட்டம் 1994 ன் கீழ் சட்ட விரோதமாகக் கருதப்படுகிறது. இச்சட்டத்தின் படி சிறுநீரகம் கொடுப்பவரும் பெறுபவரும் ஒரு உடல் உறுப்பு தானக் குழுவிடம் பதிவு செய்து அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்ட பின்னர் தான் சிறுநீரக தானத்திற்கான செயல்முறைகளைத் தொடங்க வேண்டும்.
சிறுநீரக மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 13 நபர்கள் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்குச் சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளதாக அவர்களது பரிசோதனையும் உறுதி செய்துள்ளது.

More articles

Latest article