தனிநபர் வழிப்பாட்டை தவிருங்கள்: மோடி துதிபாடிகளுக்கு ஆர்.எஸ்.எஸ். அறிவுரை

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

RSSLOGO1
பிரதமர் நரேந்திர மோடியை ‘இந்தியாவிற்கு கடவுளளித்த பரிசு’ என விவரிக்கும் பாஜக தலைவர்கள்மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (RSS) கட்சித் தலைமைத் தனிப்பட்ட நபரின் வழிபாட்டை ஊக்குவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு புது தில்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் அரசியல் தீர்மானம் நிகழும் போது மோடியை இவ்வாறு புகழ்ந்தார்.
mohanbhagawath
“செவ்வாய்க்கிழமை அன்று தீன்தயாள் ஷோத் சன்ஸ்தானில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் தலைவர்கள் உயர்மட்ட பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி RSSன் கொள்கைப்படி ‘தனிப்பட்ட வழிபாடு’ ஊக்குவிக்கப்படக்கூடது என்றும் ‘அமைப்பு’ தான் முதன்மையாக இருக்க வேண்டுமென்றும் பாஜகவிற்கு பரிந்துரைத்தனர், என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், ஐந்து மாநிலங்களில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் தேசியவாதப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாஜகவின் நடவடிக்கைக்கு ஆதரவளித்து மேலும் அதில் வளர்ச்சிப் பிரச்சினையை இணைக்குமாறும் RSS பரிந்துரைத்துள்ளது.
Modi_AmitShah_519617532
வெங்கையாநாயுடு, சமீபத்தில் நரேந்திர  மோடியை “வளரும் இந்தியாவை மாற்றுபவர்” என்றும் “ஏழைகளின் மெசைய்யா” என்றும் உலகத்தில் உள்ள பிரபலமான தலைவர்களில் ஒருவர் என்றும் இந்தியாவை மாற்றும் நோக்கத்துடன் செயல்படும் பிரதம மந்திரி என்றும் கூறினார் என்று அவரது அலுவலகத்திலிருந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

More articles

Latest article