‘ஆதிபுருஷ்’ படத்தில் விபீஷணனாக சுதீப்….?

Must read

ராதே ஷியாம் படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படம் பிரபாஸ் 21. மகாநதி/நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

இதனையடுத்து பிரபாஸ் நடிக்கும் பிரபாஸ் 22 படத்தை இயக்குநர் ஓம் ராவத் இயக்குகிறார். ஆதிபுருஷ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் பிரம்மாண்ட 3டியில் உருவாகவுள்ளது. ராமாயணம் தொடரை மையமாக கொண்ட இந்த பிரம்மாணட படைப்பு இந்தி மற்றும் தெலுங்கில் படமாகிறது. இந்த 3டி கொண்டாட்டம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் சைப் அலி கான் நடிக்கவுள்ளார். ஆதிபுருஷில் பிரபாஸுடன் சைப் அலிகான், கீர்த்தி சனான் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கன்னடத்தின் முன்னணி நடிகர் சுதீப்பை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இவர் விபீஷணன் வேடத்தில் நடிக்கக் கூடும் என தகவல் .

 

More articles

Latest article