புதுவை,
ன்று பிரசாரம் செய்ய புதுவைக்கு வருவதாக இருந்த குஷ்புவுக்கு, பிரசாரம் செய்ய வர வேண்டாம் என்று புதுச்சேரி காங்கிரஸ் தடை போட்டுள்ளது.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அவரக்குறிச்சி தேர்தலுடன் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கான சட்டமன்ற தேர்தலும்  வரும் 19ந்தேதி நடைபெற இருக்கிறது.
தேர்தலையடுத்து அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய முதல்வருமுன  நாராயணசாமி போட்டியிடுகிறார்.
kushboo-narayna
அவரை ஆதரித்து திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். ஏற்கனவே தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நாராயணசாமிக்கு ஆதரவு கேட்டு நெல்லித்தோப்பு தொகுதியில் பிரசாரம் செய்தார்.
இன்று முதல்வர் நாராயணசாமியை ஆதரித்து,காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு பிரசாரம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், திடீரென குஷ்பு பிரசாரத்திற்கு வர வேண்டும் என்று புதுச்சேரி காங்கிரஸ் தடை விதித்து உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, மத்திய அரசு வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய இருக்கும் பொதுசிவில் சட்டம் குறித்து, மத்திய அரசுக்கு ஆதரவாக குஷ்பு கருத்து கூறினார்.
அவரது கருத்துக்கு ஒரு சில முஸ்லிம் அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளப்பியது. முஸ்லிமான குஷ்புவே எப்படி பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவு தருவது என்று கண்டனம் தெரிவித்தனர்.
kushbu_3
இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியினரும் குஷ்புமீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இன்று புதுவைக்கு பிரசாரம் செய்ய வரவிருந்த குஷ்புவை தேர்தல் பிரசாரம் செய்ய வர வேண்டடாம் என்று  தடை விதித்துள்ளது.
புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் உள்ளனர். பொது சிவில் சட்டத்துக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டதால், நிலைமை நேர்மாறாக நிகழ்ந்துவிடும் என்று, காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் முதல்வர் நாராயண சாமி யிடம் வற்புறுத்தி உள்ளனர்.
மேலும் புதுவை திமுக-காங்கிரஸ் கூட்டணி நிர்வாகிகளும் குஷ்பு தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவதை விரும்ப வில்லை.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைமை குஷ்புவை பிரச்சாரத்துக்கு வரவேண்டாம் என்று தடை செய்துள்ளது.