புதுச்சேரி

காங்கிரஸ் கட்சி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைப் பெற்றுத் தரும் என மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்.

வரும் 19 ஆம் தேதி புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ளதால்ல் பிரசாரம் சூடுபிடித்து  வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வகையில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே இன்று பிரசாரம் செய்துள்ளார்.

அப்போது மல்லிகார்ஜுன கார்கே”

” புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிப்பது குறித்து பாஜக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. பாஜக அரசு புதுச்சேரி மக்களைப் புறக்கணிக்கிறது. காங்கிரஸ் புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து கிடைக்க நடவடிக்கை எடுக்கும். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் புதுச்சேரியில் மூடப்பட்ட ஆலைகள், ரேஷன்கடைகள் திறக்கப்படும்.

நாம் இந்தியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நாம் பாடுபட வேண்டும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரிக்கு யூனியன் பிரதேச அங்கீகாரம் கொடுத்தோம். தற்போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது.  காங்கிரஸ் கட்சி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைப் பெற்றுத் தரும்;

மோடி இந்தியா முழுவதும் 444 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி உள்ளார், பாஜக அரசு சில மாநிலங்களில் தேர்தல் முறையில் ஆட்சிக்கு வராமல் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்கிறது. மோடியும், அமித்ஷாவும் சட்டமன்ற உறுப்பினர்கல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பொய் வழக்கு போடுவது; குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை அரசு அமைப்புகளைக் கொண்டு பாஜகவிற்குக் கொண்டு வருகிறார்கள். ஆளுநர்கள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கு பாஜக நெருக்கடியைக் கொடுக்கிறது”

என்று கூறி உள்ளார்.