திருச்சி

மிழக அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காகப் பணம் கொடுப்பதைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையொட்டி பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி திருவெறும்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அங்குத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அதிகாரிகள் அமைச்சரின் காரை  சோதனையிட்டனர். அதிகாரிகளின் முழுமையான சோதனை முடிந்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் காரை சோதனையிட்ட போது திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ உடனிருந்தார்.