டில்லி:

அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்ட விவகாரம் தொர்பாக முடிவு எடுக்க கால அவகாசம் தேவை என தேர்வு கமிட்டிக்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதி உள்ளார்.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஏ.கே.சிக்ரி, அலோக் வர்மா எந்தவித  கொள்கை முடிவும் எடுக்கக்கூடாது என்றும், இதுகுறித்து பிரதமர் தலைமையிலான நிமயன கமிட்டி முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சிபிஐ இயக்குனர்களை தேர்வு செய்யும் நியமன கமிட்டி உறுப்பினர்களான பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் அலோக் வர்ம குறித்து ஆரா;aந்து முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது,

இந்த நிலையில், அலோக் வர்மா தீர்ப்பின் நகல் இன்றும் கிடைக்காததாலும், தீர்ப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டியது இருப்பதாலும் தேர்வு கமிட்டியில் கலந்துகொள்ள கால அவகாசம் தேவை என்று தெரிவித்து உள்ளார்.

தற்போது லோக்சபாவில் நடைபெற்று மசோதா தொடர்பான விவாதங்களில் பிசியாக இருப்பதால், அலோக் வர்மா தீர்ப்பு குறித்து ஆய்வு செய்யவில்லை என்றும், தீர்ப்பைப் படித்தபின் தான் தனது கட்சியின் பார்வையைப் பற்றிக் தெரிந்து  கொள்ள முடியும் என்பதால், வரும் 11ந்தேதி தேர்வு கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்பதை தெரிவித்து உள்ளார்.

அலோக் வர்மா வழக்கில், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்த உச்சநீதி மன்றம், சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா தொடர்வார் எனவும், அதேசமயம் அதிகார சர்ச்சை தொடர்பான புகார் நிலுவையில் இருப்பதால் அவர் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்ககூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அலோக் வர்மா மீதான புகாரை பிரதமர் மோடி தலைமையிலான விசாரணை குழு விசாரித்து முடிவெடுக்கும் வரை இந்த நிலை தொடர வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்பதால் ரபேல் விசாரணையில் இருந்து பிரதமர் மோடியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அலோக் வர்மா விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

ரபேல் விவகாரத்தில் இருந்து இனி யாரும் ஓடிப்போக முடியாது என்றும், அனில் அம்பானிக்கு 30000 கோடி ரூபாய் கொடுத்தது விசாரணையில் தெரியவரும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சி.பி.ஐ. இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து தலைமை நீதிபதி கோகோய் விலகியுள்ளார். தமக்கு பதில் நீதிபதி ஏ.கே.சிக்ரி குழுவில் இடம்பெறுவார் என நீதிபதி கோகோய் அறிவித்தார். அடுத்த சி.பி.ஐ இயக்குனரை தேர்வு செய்யும் குழு இன்று ஆலோகனை நடத்த உள்ளது எனவும் தெரிவித்தார்.

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா பதவிக்காலம் ஜனவரி.31-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், சி.பி.ஐ. இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் உச்சநீதிமன்றம் நீதிபதி ஏ.கே.சிக்ரி சேர்க்கப்பட்டுள்ளார்.