சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்வு செய்யப்பட்ட காதர் மொகிதீனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
காதர் மொகிதீன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அவ்வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்,
“இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு எனது வாழ்த்துகள்!
பண்பும் அரசியல் முதிர்ச்சியும் மதிக்கூர்மையும் பெற்ற பேராசிரியர் ஐயாவின் தலைமையில், இந்தியாவின் மதச்சார்பின்மையையும் மதநல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சீரிய மக்கள் பணி சிறக்கட்டும்!”
என்று ;பதிவிட்டுள்ளார்.