சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம்,
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக தமிழக,, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 20ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதாவது நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.,
நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
17.05.2025 : தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில்கனமழைக்கு வாய்ப்புள்ளது.
18.05.2025 : தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.”
என அறிவித்துள்ளது