‘புல்லி பாய்’ செயலி தொடர்பாக முக்கிய நபர் கைது…

Must read

சமூக வலைத்தளங்களில் பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், மாணவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பல பெண்களின் படங்களை இழிவான கருத்துடன் பதிவிட்ட ‘புல்லி பாய்’ என்ற செயலி குறித்த வழக்கில் முக்கிய நபரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான முக்கிய சதியில் ஈடுபட்டதாக நீரஜ் பிஷ்னோய் என்பவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

இது தொடர்பாக ட்விட்டர் மற்றும் கிட்-ஹப் ஆகிய சமூக வலைதள நிறுவனங்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு ஐஎஃப்எஸ்ஓ குழுவால் கைது செய்யப்பட்ட நீரஜ் பிஷ்னோய் (20), அசாமின் ஜோர்ஹாட்டின் திகம்பர் பகுதியில் வசிப்பவர். அவர் போபாலில் உள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் (வி.ஐ.டி.) பிடெக் மாணவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article