சில ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள், தங்களின் பொழுதை பரபரப்பாக போக்குவதற்கு, எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்தவகையைச் சேர்ந்தவர்தான் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்.

சமீப நாட்களாக, இந்திய டெஸ்ட் அணியை தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறது. தற்போது, சென்னை 2வது டெஸ்ட்டில், இந்திய அணி வென்றதைக்கூட அவர் கிண்டல் செய்துள்ளார்.

பீட்டர்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “இங்கிலாந்து பி-டீமை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்” என வெற்றியை ஏற்க முடியாமல் கிண்டல் செய்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், 2வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய மொயின் அலியை, சுழற்சி முறை ஓய்வுக்காக நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தையும் பீட்டர்ஸன் சாடியுள்ளார்.

அதில், “மிகவும் கடினமான, சவாலான இடத்தில் டெஸ்ட் போட்டியில் வெல்வதற்கு, சிறந்த அணியை நீங்கள் தேர்வு செய்யாவிட்டால், உங்களால் உங்கள் உணர்ச்சியைக்கூட வெளிப்படுத்த முடியாது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2005ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை நாம் வென்றோம். அந்த வெற்றி இங்கிலாந்து கிரிக்கெட்டின் தோற்றத்தையே மாற்றியது. இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலும் இங்கிலாந்து அணியின் பெயர் அனைத்து இடங்களிலும் பேசப்பட வேண்டுமானால், சிறந்த அணியைத் தேர்வு செய்தால்தான் முடியும். மொயின் அலி ஒரு டெஸ்ட் போட்டியோடு நாடு திரும்புகிறார்… வாவ்” எனத் தெரிவித்துள்ளார்.

ஒருவகையில், அவர் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தையும் கிண்டல் செய்துள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.