திருவனந்தபுரம்

மிக்ரான் அச்சுறுத்தலால் கேரள அரசு 4 நாட்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலகின் பல நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது.   இந்த பாதிப்பு இந்தியாவிலும் பரவி உள்ளது.   இந்தியாவில் இதுவரை 19 மாநிலங்களில் 578 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இதில் அதிக பட்சமாக மகாராஷ்டிராவில் பாதிப்பு காணப்படுகிறது.

ஏற்கனவே இந்தியாவில் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது.   இது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  கேரளாவில் இதுவரை 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது  எனவே கேரள அரசு வரும் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 வரை 4 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது.

கேரளாவில் இந்த 4 நாட்களும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.  இந்த ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.