கேரள மாணவி கொலை வழக்கில் இருவர் கைது

Must read

1
கேரள சட்டக்கல்லூரி மாணவி  மாணவி ஜிஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.
கேரள மாநிலம் பெரும்பாவூரில் சட்டக்கல்லூரி மாணவி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.   கடந்த வியாழனன்று இரவு  பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.
மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் மாணவியின் மார்பகங்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகள் கூர்மையான ஆயுதங்களால் சிதைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
டில்லி மாணவி நிர்பாயா பலாத்கார சம்பவத்தைப்போன்று ஜிஷாவும்  கொலை செய்யப்பட்டது கேரள மக்களை கொந்தளிக்க வைத்தது.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  இப்போது இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, உம்மன் சாண்டி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என இடதுசாரி கட்சிகள்  வலியுறுத்தி வருகின்றன.  மாநில தலைமைச் செயலகம் முன்பு   பெண்கள் அமைப்பினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினார்கள்.  இதற்கிடையே ஜிஷா கொலைவழக்கு தொடர்பாக தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் நலவாரியம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் இந்த வழக்கை குற்றப்பிரிவிற்கு மாற்ற வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் கேரள அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
 

More articles

Latest article