திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள ஸ்டுடியோ ஒன்று திருமண விழாவில் எடுக்கும் புகைப்படங்களில் உள்ள பெண்களை போர்னோகிராபி படங்களுக்கு பயன்படுத்துவதற்காக அவற்றை மார்பிங் செய்துள்ளது.

இந்த வழக்கில் கோழிக்கோடின் வடகராவை சேர்ந்த ஸ்டுடியோ உரிமையாளர்களில் தினேஷன், சதீஷன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பிபீஷ் என்பவரை தேடி வருகின்றனர். ஸ்டுடியோவுக்கு சீல் வைக்கப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது குறித்து கேரளா பெண்கள் ஆணையம் முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. சிறப்பு குழு அமைத்து விசாரிக்க கோழிக்கோடு எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.