டில்லி:

சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலின் முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 4 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. டில்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த பட்டியலை இன்று வெளியிட்டார். இதில் சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலின் முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 4 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

முதல் 10 இடங்களில் 3ம் இடத்தில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, 5ம் இடத்தில் சென்னை பிரசிடென்சி கல்லூரி, 6ம் இடத்தில் சென்னை லயோலா கல்லூரி, 10வது இடத்தில் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியும் இடம்பெற்றுள்ளன.

சிறந்த பல்கலைகழக தரவரிசை பட்டியலில் 4 வது இடத்தில் சென்னை அண்ணா பல்கலைகழகம், 13வது இடத்தில் கோவை பாரதியார் பல்கலைகழகம், 16வது இடத்தில் வேலூர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, 18 வது இடத்தில் மெட்ராஸ் பல்கலைகழகம் இடம்பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த தர வரிசை பட்டியலில் ஐ.ஐ.டி. பெங்களூரு முதலிடத்திலும், ஐ.ஐ.டி. மெட்ராஸ் 2வது இடத்திலும், அண்ணா பல்கலைகழகம் 10வது இடத்திலும் உள்ளன.