ஊழலுக்கு எதிராக மொபைல் ஆப்: கேரளா அசத்தல்

Must read

திருவனந்தபுரம்:
ர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஊழலுக்கு எதிரான மொபைல் ஆப்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது கேரளா அரசு.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ஆம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதை யொட்டி நடைபெற்ற விழாவில் கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் ஊழலுக்கு எதிரான 2 மொபைல் ஆப்களை  அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தார்.

பொதுமக்கள் ஊழலுக்கு எதிராக போராடும் வகையில்,  அரைசிங்கேரளா (Arising Kerala), விசில்நவ் (Whistle Now) என்ற இரண்டு மொபைல் ஆப்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார் கேரள முதல்வர்.
இதுகுறித்து  கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “ஊழலற்ற மற்றும் நிலையான வளர்ச்சி” என்பதே மாநில அரசின் நோக்கம். ஊழலை ஒழிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அரசு, அரசு சாரா நிறுவனங்களில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன”
இந்த 2 மொபைல் ஆப்களையும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பொதுமக்கள் டவுன்லோடு செய்து கொள்ள லாம் என்று தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் இந்த மொபைல் ஆப்கள் மூலம், தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும், இந்த ஆப்கள் மூலம் புகார் தெரிவித்தால்,  ஊழல் தடுப்பு அதிகாரிகள்  புகார் குறித்து உடனடி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த மொபைல் ஆப் ஏற்கனவே சில மாதங்களாக பரிச்சார்த்த முறையில் செயல்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்,  ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிடுபவர்கள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்க உதவி செய்ப வர்களுக்கு வருடம் தோறும் விசில்ப்ளோவர் (தகவல் கூறுனர்) விருது வழங்கப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article