சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்
பொதுவாக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் வெடித்தவுடனேயே பலசர்ச்சைகளும் தானாகவே எழுப்பும். அதனால் இரு கோணங்களையும் பார்ப்போம்.
முதலில் பாதிக்கப்பட்டதாககூறும் பெண்ணின் வெர்ஷன்…
”உன் கணவர் ஆஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்கிறார் எனச்சொல்லி என்னை திருச்சூரிலிருந்து நாலுபேர் அழைத்துப் போனார்கள். அனைவரும் கணவரின் நண்பர்கள் என்பதால் நம்பிப்போனேன். ஆனால் அவர்கள் என்னை எங்கோயோ தூக்கிக்கிட்டுபோய், கும்பலாக ரேப் செய்தனர்.
புகார் கொடுக்கப் போனபோது, போலீசார் எனக்கே ஒரு மாதிரியே பாடம் எடுத்ததால் அங்கே ஒன்று செய்ய முடியாமல் போய்விட்டது. என்னை கெடுத்தவர்கள், என்கணவரை பணயக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டதால் முக்கியமான கட்டத்தில் புகாரை வாபஸ் வாங்கிவிட்டேன்..
gang-rape
‘நாங்கள் உபயோகித்து தூக்கிப்போட்ட பெண்ணுடன்தான் நீவாழ்கிறாயா? என்று கேட்டு ரேப்பிஸ்ட்டுகள் என்கணவரை பலமுறை கேலிபேசி அவமானப்படுத்தியுள்ளனர்.
என்னை கெடுத்தவர்கள், சிபு, பினேஷ், ஜினேஷ் மற்றும் பி.என்.ஜெயநாதன் (சிபிஎம்கவுன்சிலர்) என்று பெயர்களை தெளிவாக சொன்னபோது பேரமங்களம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் என்ன கேட்டார் தெரியுமா?
உன்னை கெடுக்கும்போது அந்த நான்குபேரில் யாரின் ‘திறமை’ உனக்கு திருப்திகரமாக இருந்தது? இதுபோல பல அவமானங்களை நான் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால் இப்போது தைரியம் வந்துவிட்டது. நீதி கேட்டு கடைசி வரை போராடப் போகிறேன். கவுன்சிலர்
கவுன்சிலர் ஜெயநாதன் வெர்ஷன்..
”கூட்டாய் ரேப் செய்ததாக கணவன் மனைவி இருவரும் நாடகமாடுகின்றனர். நான் கவுன்சிலர் என்பதால் அரசியலாக்கப்பார்க்கிறார்கள். 15 லட்ச ரூபாய்வரை கேட்டு மிரட்டினார்கள். நான் பணியவே இல்லை அதனால்தான் இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு  கேங்ரேப் என்று கதைவிட ஆரம்பித்துள்ளனர்”
பாதிக்கப்பட்டதாக சொல்லும் பெண், டப்பிங்ஆர்டிஸ்ட் பாக்யலட்சுமி என்பவர் உதவியோடு, டிஜிபி மற்றும், முதலமைச்சருடன் சந்திப்பு என மும்முரமாக களம் இறங்கியதில், விவகாரம் பெரியதாக வெடித்துள்ளது. ஏஎஸ்பி-பூங்குழலி தலைமையில் விசாரணையை நடத்த கேரளஅரசு உத்தரவிட்டுள்ளது..
இன்னொரு புறம், இந்த விவகாரம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது.
பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் வடக்கஞ்சேரி முனிசிபல் கவுன்சிலர் ஜெயநாதன் மற்றும் பினேஷ் ஆகிய இருவரையும் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட சிபிஎம் செயலாளர் கே.ராதாகிருஷ்ணன், பேசும்போது பலாத்காரத்திற்கு ஆளானதாக கூறும் பெண்ணின் பெயரையும் அவரின் கணவர் பெயரையும் வெளிப்படையாக சொல்லி விட்டார்..
பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் பெயரை எப்படி பகிரங்கப்படுத்தலாம் என்று மகளிர் அமைப்புகள் உடனே சீற, சிபிஎம் ராதாகிருஷ்ணனும் அசரவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயரை வெளியிடும்போடு, குற்றம்சாட்டும் பெண்ணின் பெயரை மட்டும் வெளியிடக்கூடாது என்று சொல்வது என்ன நியாயம் என்று பதிலுக்கு போட்டு தாக்கி வருகிறார்.
விவகாரத்தில் நுழைபவர்களையும் வில்லங்கத்தில் சிக்கவைக்கும் இந்த கேங்க் ரேப், பினராஜி விஜயனின் மார்ச்சிஸ்ட் அரசை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கப்போகிறதோ!
இந்த விவகாரம்தான் இப்போது கேரளாவில் டாப் நியூஸ்