திருவனந்தபுரம்: பறவை காய்ச்சல் பாதிப்பை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது.

அம்மாநிலத்தில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூா் பகுதியில் அமைந்துள்ள வாத்து பண்ணையில் இந்த பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பண்ணையில் இருந்த 1,500 வாத்துகளும், தொற்றுக்கு பலியாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் உள்ள பண்ணையிலும் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

அந்த பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயா் பாதுகாப்பு விலங்குகள் நோய் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆய்வு முடிவுகள் பறவை காய்ச்சல் பாதிப்பு என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

இதையடுத்து, பறவை காய்ச்சலை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில்  2016ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது, குறிப்பிடத்தக்கது.