திருவனந்தபுரம்: இங்கிலாந்திலிருந்து கேரளா திரும்பிய 6 பேருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

6 பேரில், கோழிக்கோடு, ஆலப்புழாவில் தலா 2 பேரும், கோட்டயம் மற்றும் கண்ணூரில் தலா ஒருவரும் அடங்குவர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சுகாதார அமைச்சர் சைஷலஜா கூறி இருப்பதாவது:

லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், வெளிநாடுகளில் இருந்து அதிக மக்கள் வர ஆரம்பித்து உள்ளனர். எனவே நாம் சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கத்துடன் இருப்பது அவசியம்.

மக்கள் அவசர தேவைகளுக்காக மட்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டும். அடுத்த சில வாரங்களுக்கு இது கட்டாயம் பின்பற்ற வேண்டியது அவசியம்.

இங்கிலாந்திலிருந்து திரும்பிய 6 பேருக்கு உருமாறிய புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுனர். 6 பேருடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன என்றார்.