கண்ணூர்:

ம்யூ.தொண்டர் கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ், பாஜகவை சேர்ந்த 9 பேருக்க ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் கண்ணூர்  சிறையில் சிபிஐஎம் தொண்டர் கேபி ரவீந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு காரணமாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய கட்சியை சேர்ந்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சுமார் 15 ஆண்டு காலமாக நடைபெற்று வந்தநிலையில், நேற்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த , 9 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ 1 லட்சம் அபராதம் வழங்கி கேரள தலச்சேரி கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.