கோவை,

வானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியில் கேரளா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடுத்துள்ள நிலையில் கேரளா தடுப்பணை கட்டும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது.

இது தமிழக அரசை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

கேரள அரசு  பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணைகள் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய வனத்துறையும் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த 6 தடுப்பணைகளை கட்டப்பட்டால், தமிழகத்திற்க வரும் பவானி ஆற்று தண்ணீர் தடை பிட்டுவிடும். இதன் காரணமாக பல லட்சம்  ஏக்கர் நிலங்கள் பாசன வழியின்று வறண்டு விடும் அபாயம் ஏற்படும்.

மேலும்,  கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கடுமையான குடிதண்ணீர்  தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

இதுபோன்ற சூழலில் கேரள அரசு  பிடிவாதமாக பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி வருவது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.

கேரளாவின் தடுப்பணை கட்டும் முயற்சியை தடுக்க கோரி தமிழக முதல்வர் பன்னீர், மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

தேக்குவட்டையில் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள கட்டுமான பணிகளையும் மிக விரைவாக முடிக்க கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கேரளாவின் இச்செயல்  இது தமிழக அரசை அதிர்ச்சியடைய செய்துள்ளது.