டில்லி

மலாக்கத்துறை இல்லை என்றால் பாஜகவில் இருந்து  பாதி அரசியல்வாதிகள் விலகி விடுவார்கள் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டில்லி மாநில மதுபான கொள்கை ஊழல் தொடர்பாகப் பல ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களிடம்  விசாரணை நடந்து வருகிறது.  இந்த ஊழல் தொடர்பான வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 சம்மன்கள் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை

நேற்று டில்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம்

”அமலாக்க துறை மூடப்பட்டு விட்டால் மற்றும் பணமோசடி தடுப்பு சட்டம் நீக்கப்பட்டு விட்டால், பா.ஜ.க.வில் இருந்து பாதி அரசியல்வாதிகள் விலகி விடுவார்கள்.

அமலாக்கத்துறை அதிகாரிகளே பல தலைவர்கள் பா.ஜ.க.வில் சேருவதற்குக் காரணம் ஆவார்கள்.  அவர்கள் இல்லையெனில், ஒருவரும் பா.ஜ.க.வில் சேரமாட்டார்கள்

ஒருவேளை அப்படி நடக்குமென்றால், பா.ஜ.க.வை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் மற்றும் வசுந்தர ராஜே ஆகியோர் தனியாக அவர்களுக்கான கட்சிகளையே தொடங்கி விடுவார்கள்”

எனக் கூறியுள்ளார்.