Skip to content
  • Tue. Sep 15th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

கீழடி அகழ்வாராய்ச்சி: 21 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு

Sep 25, 2020

சிவகங்கை: திருபுவனம் அருகே கீழடி அருகே அகரம்  பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில்,  21 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கீழடி ஊராட்சியில் நடைபெற்று வருகின்றன. இந்த அகழ்வராய்ச்சி பணிகள் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. தற்போது, அகழ்வாய்வு  பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வராய்ச்சியின்போது, பெரிய, சிறிய பானைகள், பல வரிசைகள் கொண்ட செங்கல் கட்டிட சுவர்கள், விலங்கின எலும்பு கூடுகள், செங்கலால் ஆன தரைத்தளம், நெருப்பு பயன்பாட்டின் கட்டமைப்பு, எடைக்கற்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
 கொந்தகையில் நடைபெற்ற அகழ்வராய்ச்சியில்,  முதுமக்கள் தாழிகள், சிறிய, பெரிய மனித எலும்புகள், மண்டை ஓடுகள், குழந்தையின் முழு உருவ எலும்பு கூடுகள், குவளை, சிறிய பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மணலூரில் நடத்தப்பட்ட அகழ்வராய்ச்சியின்போது,  சுடுமண் உலை, எலும்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அகரத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் கடந்த 22-ந்தேதி  17 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உறை கிணற்றில் உள்ள அடுக்கு முக்கால் அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்டதாக இருந்தது. இதையடுத்து தொடர்ந்து  கூடுதலாக குழிகள் தோண்டி ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது.
அப்போது, மேலும் கூடுதலாக 4 அடுக்குகள் கொண்ட உறை இருப்பது தெரிய வந்ததது. இதையடுத்து, அந்த பகுதியில் மண்ணை அகற்றியபோது 21 அடுக்குகள் கொண்ட உறைகிணறு இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்த உறை கிணறுகள்,  பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் தண்ணீரை  சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும்  என்பதற்காக இதுபோன்ற உறை கிணறுகளை அமைத்து இருப்பதாக ஆயவாளர்கள் தெரிவித்து உள்ளனர்.  இந்த பகதியில்  மேலும் கூடுதலான உறைகள் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது.
6வது கட்ட அகழ்வாய்பு பணிகள் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள அரிய பொருட்கள், அந்த பகுதியில் மேலும் பல பழங்கால வாழ்க்கைளை முறைகள் தொடர்பான அரிய பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதனால், அகர்வாய்வுக்கான பணிக்காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஏற்கனேவே  5-ம் கட்ட அகழாய்வின்போது கீழடியில்  4 அடி உயர உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post navigation

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் நிறுவ வேண்டும்! மோடிக்கு எடப்பாடி கடிதம்…
திமுக தலைவர் ஸ்டாலினுடன், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்திப்பு

Related Post

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer