சென்னை: நவராத்திரி விழாவையொட்டி, சென்னை கயல்ஸ் அகாடமி மற்றும் கிளாசிக்கல்  ஆர்ட்ஸ் பவுண்டேசன் கோவை இணைந்து, 3 நாட்கள் நவராத்திரி நடனத்திருவிழாவை விமரிசையாக நடத்தியது.

நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழா அக்டோபர் மாதம் 7ந்தேதி அன்று தொடங்கி அக்டோபர் 15 அதாவது விஜ தசமி அன்று  நிறைவு பெறுகிறது. நவராத்திரி விழாவையொட்டி ஆங்காங்கே ஏராளமான நிகழ்ச்சிகள் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பல சபாக்களில் அம்பிகையை போற்றும் விதமாக பல்வேறு நடனம், பாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்துக்களின் வீடுகளில், கொலு வைத்து, நவராத்திரியின் ஒன்பது நாட்களும்; ஒன்பது  விதமாக அம்பிகையை பூஜித்து வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த கயல்ஸ் டான்ஸ் அகாடமி, நவராத்திரி பண்டிகையை சிறப்பிக்கும் விதமான 3 நாட்கள் நடன நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்தியது. இந்த நடன நிகழ்ச்சியானது 7ந்தேதி முதல் 9ந்தேதி வரை சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள பாபாஜி வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கலையரங்கில் மாலை 5மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பான முறையில் நடைபெற்றது.

விழாவின் முதல்நாளான 7ந்தேதி  கயல்ஸ் அகாடமி  தலைவர்  கலைமாமணி  கயல்விழி  கபிலன் முன்னிலையில், ஸ்ரீ தேவி  நித்யாலயா தலைவர் டாக்டர் ஷீலா யுன்னி கிருஷ்ணனால்  நிகழ்ச்சி  விமரிசையாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  பாரதிய வித்யா பவனின்  சென்னை மண்டல தலைவர் ஸ்ரீ ராமசாமி  கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி  நித்யாலயாவைச் சேர்ந்த நடனக்குழுவினர்  நடன நிகழ்ச்சி  நடைபெற்றது. தொடர்ந்து, குரு ஸ்ரீபுவனேஸ்வரி வைத்திய நாதன் முன்னிலையில்,  நிருத்யா  பயாஷா  நடனம் மற்றும் பாட்டு  பள்ளி மாணாக்கர்களின்  நிகழ்ச்சியும்  நடைபெற்றது.

2வது நாளான  8ந்தேதி அன்று  மாலை  கயல்ஸ் அகாடமி  மற்றும்  பாபாஜி வித்யாஷரம் பள்ளி  மாணாக்கர்களின்  நிகழ்ச்சிகள்  நடைபெற்றன.  தொடர்ந்து, பாண்டநல்லூர்  ஆர்ட்ஸ்  ஸ்கூல்  நிர்வாகி,  கலா ரத்னா டாக்டர் அர்ச்சனா நாராயணமூர்த்தியின்   நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து, ஸ்ரீநிதிஷ் மற்றும் திருமதி  இந்துவின்  இக்ஷனா  நிகழ்ச்சியும், பின்னர்  பாலா  நாட்டிய  மஞ்சரி  டிரஸ்ட்  நிகழ்ச்சியும்  நடைபெற்றது.

3வது நாளான  9ந்தேதி  அன்று  நாட்டியகலா  சூடாமணி  திருமதி  ரஞ்சனா வினோத்குமாரின்  ஸ்ரீகலாக்ஷி டான்ஸ்  பள்ளியின்  நடன  நிகழ்ச்சி நடைபெறுகிறது தொடர்நது  குமாரி அமுதமே வெங்கடேஷன்  மற்றும்  ஆதம்பாக்கம் ஸ்ரீ நிருத்யலாயா அகாடமி மாணாக்கர்களின்  நடன  நிகழ்ச்சி  எழுச்சியுடன் நடைபெறுகிறது. அதையடுத்து, குமாரி அக்ஷயா ராஜேஸ்வரி  நிகழ்ச்சியும், தொடர்ந்து, நிருத்திய பயாஷா  அகாடமியின்  நடன நி கழ்ச்சியும்  சிறப்பாக நடைபெற்றது. இறுதியாக  நிருத்யா  பயாஷா அகாடமியின்  நித்யா  மற்றும்  பிரியாவின் நிகழ்ச்சிகளும்  நடைபெற்றன.

9 நாட்கள்  நடைபெற்ற  இந்த  நடனத்திருவிழாவில்  ஏராளமானோர் கலந்து கொண்டு  சிறப்பித்தனர்.