என்னை வெற்றி பெறச் செய்த வேலூர் தொகுதி மக்களுக்கு நன்றி: கதிர் ஆனந்த் உருக்கம்

Must read

தனக்கு வாக்களித்து, வெற்றிபெற செய்த வேலூர் தொகுதி மக்களுக்கு தனது டுவிட்டர் பக்கம் மூலமாக வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறி, வேலூர் தொகுதிக்கு மட்டும் அப்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு, சில தினங்களுக்கு முன்பு வாக்குப்பதிவும் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. துவக்கத்தில் முன்னிலை வகித்து வந்த அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம், பின்னர் கதிர் ஆனந்தை விட குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கினார். கடைசி சுற்று வரை அவரால் முன்னிலை பெற முடியாத நிலையில், 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ள கதிர் ஆனந்த், “அன்பார்ந்த வேலூர் பாராளுமன்ற தொகுதி வாக்காளப்பெருமக்களே, நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் என்னை வெற்றிபெற செய்த உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article