கஸ்தூரியை ஆடவைத்த புஷ்பா படத்தின் ஐட்டம் சாங் ‘ஊ சொல்றியா மாமா’

Must read

அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ள படம் ‘புஷ்பா’.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படம் டிசம்பர் 17 ம் தேதி ரிலீசாகிறது.

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா, வில்லனாக பகத் பாசில் நடித்துள்ளனர்.

செம்மரக்கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தில் ராஜலக்ஷ்மி பாடிய ‘சாமி சாமி’ பாடல் ஹிட் ஆன நிலையில், இந்த படத்தின் மற்றொரு பாடலான ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இந்த பாடலுக்கு சமந்தாவின் நடன அசைவுகள் சர்ச்சையை ஏற்படுத்தி நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இணைய தளங்களில் வைரலாகி வரும் இந்த பாடலை தமிழ் தெலுங்கு மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் ரிபீட்டாக கேட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை கஸ்தூரியின் பதிவு அவரது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

தமிழில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலை தனது மயக்கும் குரலில் பாடியிருக்கிறார் ஆண்ட்ரியா.

More articles

Latest article