இந்திய ராணுவத்தின் அங்கமான பிராந்திய ராணுவத்தில் தங்களை சேர்த்துக்கொள்ள ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சிவிலியன்களுக்கு ஆண்டு தோறும் ராணுவப் பயிற்சியை பிராந்திய ராணுவம் அளித்து வருகிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கிரிக்கெட் வீரர் டோனி சேர்ந்து பயிற்சி பெற்றனர். இந்த ராணுவ பிரிவில் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் சேர்வதற்கான முகாம் பார்முல்லா அருகே கான்டமுல்லாவில் நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

சமீபத்தில் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட நிலையில், காவல்துறை, ராணுவம் போன்ற துறைகளை சேர இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.