தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக நடிகைகளுடன் தானும், தனது மாமாவும் உல்லாசமாக இருந்துள்ளதாகவும், ஒரு தமிழ் நடிகைக்கு தனது மாமா தான் நகையை கொடுத்ததாகவும், அந்த நகை நடிகையிடமே உள்ளது என்றும் லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையன் சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் ஓட்டை போட்டு, ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ நகைகளை முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் சமீபத்தில் கொள்ளையடித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக மொத்தம் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், மதுரை வாடிப்பட்டி காவலர்கள், திருச்சி சென்று சுரேஷிடம் விசாரனை மேற்கொண்டனர். 3ம் நாள் விசாரணையில் தன்னுடைய மாமா முருகன், எப்படியெல்லாம் கொள்ளை அடித்தார் என்பதை போலீசாரிடம் தெரிவித்த சுரேஷ், அவருக்கு தமிழ் இளம் நடிகையுடன் தொடர்பு உள்ளதையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்திகள் முன்னரே கசிந்த காரணத்தால், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள முருகன், எந்த நடிகையுடன் தொடர்பில் இருந்திருப்பார் என்கிற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், மீண்டும் நடிகை தொடர்பு பற்றி சுரேஷ் இன்று காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதில், தானும், தன் மாமாவும், கொள்ளையடித்த பணத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளதாகவும், ஏற்கனவே 2 தெலுங்கு படங்கள் எடுத்து கையை சுட்டுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஷுட்டிங் முடிந்தும் படம் ரிலீஸ் ஆகாத ஆத்திரத்தில் தாங்கள் இருந்ததாகவும், அதனால் தான் பண நெருக்கடியை சரிக்கட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்ததாகவும் கூறியுள்ள சுரேஷ், அந்த பணத்தை வைத்து மீண்டும் சினிமா எடுக்க திட்டம் போட்டதாகவும் சொல்லியுள்ளார்.

அத்தோடு, படம் எடுப்பதற்காக தானும், தன் மாமா முருகனும், தற்போது பிரபலமாக இருக்கும் தமிழ் நடிகையை நேரில் போய் பார்த்ததாகவும், அந்த நடிகை முன்னணி ஹீரோக்களான விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்தவர் என்றும் கூறியுள்ள சுரேஷ், அவர் ஒரு வாரிசு நடிகை என்றும், தாங்கள் எடுக்க போகும் படத்தில் நீங்கள் தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று கேட்டபோது, தற்போது தான் பிசியாக இருப்பதாகவும், கால்ஷீட் உடனே கிடைக்காதே என்றும் அந்நடிகை சொன்னதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், நடிகையின் இப்பதிலை தொடர்ந்து, சொந்தமாக ஒரு நகைக்கடையை தாங்கள் வைத்துள்ளதாக சொல்லி, ஒரு நகையை அந்த நடிகைக்கு தாங்கள் கொடுத்ததாகவும், அது ஏற்கனவே வங்கியில் கொள்ளையடித்த நகை தான் என்றும் கூறியுள்ள சுரேஷ், உடனே அந்த நகையை நடிகை பெற்றுகொண்டு, இருவருடனும் உல்லாசமாக இருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

சுரேஷின் வாக்குமூலத்தை தொடர்ந்து, நகையை பெற்ற நடிகையிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள காவல்துறையினர், கொள்ளையடித்த நகை, பணத்தை வேறு நடிகைகள் யாரிடமாவது முருகன் கொடுத்து வைத்திருக்கிறாரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுரேஷின் வாக்குமூலத்தை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதால், முருகனுடன் உல்லாசமாக இருந்த தமிழ், தெலுங்கு நடிகைகள் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.