காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்:  8 வீரர்கள் பலி

Must read

images (1)

ஜம்மு:  
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் படயைச்  சேர்ந்த 8 வீரர்கள் பலியானார்கள்.
காஷ்மீரி்ல் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பம்பூர் என்ற இடத்தில் இன்று மாலை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் வழக்கமாம்போல ரோந்து சென்றார்கள். அப்போது  அவர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 8 வீரர்கள் பலியானார்கள்.  28 வீரர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள்.
தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதாக மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் ஐ.ஜி நளின் பிரபாத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article