டில்லி:

ம்மு காஷ்மீர் புல்வாமா பயங்கரவாதிகள்  நடத்திய தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் அரசு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்த மத்திய அரசு, பாகிஸ்தான் தூதரிடம் நேரடியாக கண்டனம் தெரிவித்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ரிசர்வ் போலீஸ் பஸ் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய அரசு குற்றம் சாட்டி வருகிறது. இதனை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இதற்கிடையே, கமாண்டோ படையின்  உயர் அதிகாரிகள், என்.ஐ.ஏ. உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் தூதருக்கு மத்திய அரசு  சம்மன் அனுப்பியது. இதையடுத்து, பாகிஸ்தான் தூதர் சொஹைல் முகமது வெளியுறவு அமைச்சகத்திற்கு வந்தார். அவரிடம் இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத அமைப்புக்க  எதிராக “உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை” எடுக்கப்பட வேண்டும், உடனடியாக அதன் பிராந்தியங்களிலிருந்து செயல்படும் பயங்கரவாதத் துடன் தொடர்புடைய குழுக்கள் அல்லது தனிநபர்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவரிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.