டில்லி:

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியான நிலையிலும், பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்தபடி    அதிவேக ரெயில் சேவையான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்தார்.

ஆனால், அந்த ரயில், 200 கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில் திடீரென பிரேக் டவுன் ஆகி நின்றது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுவே இந்தியாவின் முதல் அதிவேக ரயிலான மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, டெல்லி-வாரணாசி வழித்தடத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. மின்சாரம் துண்டிப்பு காரணமாக ரயில் நடுவழியில் நின்றதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால் ரயில் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது, சந்தேகப்படும் வகையில் சத்தம் எழுந் ததால், உடடினயாக ரயில் நிறுத்தப்பட்டதாகவும், அதன் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலககும் நிலையில் இருந்தாகவும் கூறப்பட்டது.  இந்த சம்பவம் டில்லிக்கு வெளியே சுமார் 200 கி.மீ. தூதரத்திலும், உத்தரபிரதேச மாநிலம் துந்தலா ரயில் நிலையத்தில்இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து வடக்கு ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும், விபத்து குறித்து பொறியாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்ட காட்சி வீடியோ… 

இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், வந்தேபாரத் ரயில் டில்லிக்கு முன்பாக 200 கி.மீ தொலைவில் டின்டா எனும் இடத்தில் வந்தபோது, பழுதுஏற்பட்டு நின்றது.  அதிகாலை 5 மணி அளவில் ரயிலில் உள்ள சில பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின் சாம்ரோலா ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

யிலை 40கி.மீ வேகத்துக்கு மேல் இயக்க முடியவில்லை. இதனால் 10 கி.மீ வேகத்தில் ரயில் மெதுவாக இயக்கப்பட்டு ரயில்நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. ரயிலில் இருந்து புகையும், கருகிய நெடியும் வந்தது. பிரேக் ஸிஸ்டெம் பழுதடைந்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அனைத்துப் பயணிகளும் வேறு ரயில் மூலம் டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ரயிலின் வேகத்தை அதிகரிக்கும் போது, ரயிலில் இருந்து பலத்த சத்தம் எழுந்ததால், இது பிரேக் பழுது என்று முதல்கட்ட ஆய்வில் தெரியவந்தது என கூறி உள்ளனர்.