காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த ஐ. நா, அமெரிக்கா

Must read

டில்லி:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அமெரிக்காவிடம் வைத்த கோரிக்கையை அமெரிக்கா அரசு நிராகரித்து உள்ளது. மேலும் ஐ.நா சபையும் பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்து உள்ளது.

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்  சிறப்பு அந்தஸ்து ரத்து வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ரத்து செய்யப்பட்டது. இதற்கு  இந்தியாவில் பெரும்பாலான கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் உள்பட சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தியா அரசின் நடவடிக்கைக்கு பாகிஸ்தானும் பயங்கர எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால்,  காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் இதில் எந்தவொரு நாடும் தலையிட உரிமை இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவுடனான உறவுகளை முறித்துக்கொள்ளப் போவதாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான், உலக நாடுகளின் ஆதரவை கோரி வருகிறது. ஆனால், பல நாடுகள்,  இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்? என்று உலக நாடுகள் கேள்வி எழுப்பிய நிலையில், பாகிஸ்தானின்  கருத்துக்கு அமெரிக்கவும் அதிருப்தி தெரிவித்து உள்ளது.

காஷ்மீரில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கையால் மீண்டும் ஒரு புல்வாமா தாக்குதல் நடைபெறும் என பாகிஸ்தான் கூறியதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கும் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவும் பாகிஸ்தான் துணை போகக் கூடாது என்று அமெரிக்கா  எச்சரிக்கையை விடுத்துள்ளது. தனது சொந்த மண்ணில் வேரூன்றிய தீவிரவாதத்தை அடக்க பாகிஸ்தான் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

அதே நேரத்தில் வெளிப்படைத்தன்மையும் அரசியல் பங்கேற்பு ஜனநாயகத்தின் அம்சங்கள் என்றும் இவற்றை இந்திய அரசு பின்பற்றும் என்று நம்புவதாவும் அமெரிக்கா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் ஒரே விதமான பாதுகாப்பு என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பாகிஸ்தான் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லையில் தீவிரவாத செயல்களுக்கு துணை போக கூடாது என்றும் அமெரிக்கா  அறிவுறுத்தி உள்ளது.

இதுபோல, காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஐ.நா.வும் ஜகா வாங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் அதிகப்பட்ச கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர்  அன்டோனியோ குட்டெரெஸ் அறிவுறுத்தி உள்ளார்.

காஷ்மீர் பிரச்சினை 1972 ஆம் ஆண்டின் சிம்லா உடன்படிக்கைக்கு இணங்கவும், ஐ.நா. சாசனத்தின் படி அமைதியான வழிமுறைகளிலும் இருதரப்பு ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

இதன காரணமாக காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிடக்கோரிய பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. செய்திதொடர்பாளர்,  ஜம்மு-காஷ்மீரின் நிலைமையை பொதுச்செயலாளர் கவலையுடன் கண்காணித்து வருகிறார் என்றும்,  இந்த பிராந்தியத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடு உலகத்தால் நிர்வகிக்கப்படுகிறது  என்றவர், “சிம்லா ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பான 1972 ஒப்பந்தத்தையும் பொதுச்செயலாளர் நினைவு கூர்ந்தார், இது ஜம்மு-காஷ்மீரின் இறுதி நிலை அமைதியான வழிமுறைகளால் தீர்க்கப்பட வேண்டும் என்று ஐ.நா. விரும்புகிறது என்று தெரிவித்தார்.

More articles

Latest article