காஷ்மீர்: வன்முறை தவிர்த்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்! முதல்வர் அழைப்பு!!

Must read

ஶ்ரீநகர்:
காஷ்மீர்  பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண  வன்முறையை கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி  போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக பிடிஐக்கு அளித்த பேட்டியில்,
megapupaகாஷ்மீர் மாநிலத்தில் வன்முறையை கைவிட்டு, அமைதி தீர்வு காண எவரேனும் விரும்பினால் அவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.
போராட்டங்களை கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு வந்தால் பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம்.
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உண்மையாக இருந்தால் பிரிவினைவாத தலைவர்களையும் பேச்சு வார்த்தையில் சேர்க்கத் தயார் என்று கூறி உள்ளார்.
ஆனால், அதற்குமுன் பேச்சுவார்த்தை நடத்த வசதியாக மாநிலத்தில் நல்ல சூழல் ஏற்பட வேண்டும் ஆனால் ஒரு சிலர் பாதுகாப்புப்படை முகாம்கள் மீது தாக்குதல் நடத்தும்படி இளைஞர்களை தூண்டிவிடுகின்றனர். அவர்கள் அதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.  காஷ்மீரில் அமைதி ஏற்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
 

More articles

Latest article