பாட்னா:
மிழக டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கருணாசாகர், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் பீகாரில் ஆளும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இணைந்தார்.

1991 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான கருணாசாகர், தமிழக காவல்துறை உயர் பதவியில் இருந்து, கடந்த மாதம் ஓய்வு பெற்றார். உயர் ஜாதி பூமிஹார் சமூகத்தைச் சேர்ந்த இவர், பீகாரின் ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

ஆர்ஜேடி கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இணைந்தார்.

கருணாசாகர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தது குறித்து பேசிய தேஜஸ்வி யாதவ், கட்சிக்கு அறிவாளிகள் தேவை என்றும், தமிழக முன்னாள் டிஜிபி இணைந்தது சாதகமான விஷயம் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் தமிழக டி.ஜி.பி., பதவிக்கு வந்த பின், எங்கள் கட்சி வலுப்பெறும். அவரைப் போல் இன்னும் சில அறிவாளிகள் எங்கள் கட்சியில் சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தான் பிறந்த அந்த மாநில மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு உள்ளது. அவர் இணைந்ததால், லாலு ஜியின் கரம் வலுவடைந்தது,” என்றார்.