கத்தார் மாஸ்டர்ஸ் 2023 செஸ் போட்டியில் உலக சாம்பியன் மக்னஸ் கார்ல்சனை இந்திய கிராண்ட் மாஸ்டர் கார்த்திகேயன் தோற்கடித்தார்.

பாரம்பரிய செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த்-க்கு அடுத்ததாக கார்ல்சனை தோற்கடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை இந்த வெற்றியின் மூலம் பெற்றுள்ளார் கார்த்திகேயன்.
7வது சுற்று ஆட்டத்தில் கார்ல்சன் செய்த ஒரு தவறான நகர்த்தலை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட கார்த்திகேயன் தொடர்ந்து முன்னேறி வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியை அடுத்து தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திகேயன் முரளி 5.5/7 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் உள்ளார்.
Patrikai.com official YouTube Channel