பெங்களூரு

இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணி போட்டி இடுகிறது.

இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கத்தில்  (18-வது லீக்கில்)  ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.ஏற்கனவே 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா தனது முதல் இருஆட்டங்களில் முறையே இந்தியா, தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது.

இதற்கு. முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.  எனவே ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் எழுச்சி பெற வேண்டியது அவசியமாகும்.

இந்த அணியில் பேட்டிங்கில் ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ் தவிர வேறுயாரும் அரைசதத்தை எட்டவில்லை. வார்னர், எனவே ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன் ரன் எந்திரமாக மாறினால் அது அணிக்கு கைகொடுக்கும். இந்த வெற்றி அடுத்த சுற்று வாய்ப்பில் சிக்கலின்றி நீடிக்க அந்த அணிக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், வார்னர், ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஸ், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், ஸ்டார்க், கம்மின்ஸ் (கேப்டன்), ஜம்பா, ஹேசில்வுட் .

பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அச்சாம் (கேப்டன்), ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, ஷதப் கான் அல்லது உஸ்மா மிர், முகமது நவாஸ், ஹசன் அலி, அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்.