வெற்றிமாறன் இயக்கி வரும் ‘அசுரன்’, துரை.செந்தில்குமார் இயக்கி வரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.

இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்பராஜ், செல்வராகவன், ராம்குமார் ஆகியோர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது ஆகஸ்ட் மாதத்தில் கார்த்திக் சுப்பராஜ் படத்தைத் துவங்க ஆயுத்தமாகி வருகிறார்கள். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டுத் தான், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ்.