இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி .

சுல்தான் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் பாடல் அனிருத் பாடியுள்ள ஜெய் சுல்தான் என்ற இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை பிரபல நிறுவனமான AP International கைப்பற்றியுள்ளனர் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இரண்டாவது பாடலான யாரையும் இவ்ளோ அழகாவின் லிரிக்கல் வீடியோ மார்ச் 5ம் தேதி இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்தார்கள். விவேகா எழுதிய பாடலை பாடியிருப்பது சிம்பு என்று விளம்பரம் செய்தனர்.

அறிவித்தபடி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியிருக்கிறது. லிரிக்கல் வீடியோவை பார்த்த ரசிகர்களோ, வேற லெவல் என்கிறார்கள்.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இன்று படக்குழுவினர் சென்னை ஆயிரம் விளக்கில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் கண்ணன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் கார்த்தி,100 நடிகர்களுடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்தது சவாலாக இருந்ததாக குறிப்பிட்டார். மேலும், படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசும்பொழுது புதிதாக ஒரு தலைமை வரும்போது மக்கள் எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும், அதற்கு தமிழ்நாடு சிறந்த உதாரணம் எனவும் தற்போதைய அரசியல் களத்தையும் மேற்கோள்காட்டி பேசினார்.